கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

புத்திர கவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

புத்திர கவுண்டம்பாளையம் கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் மகாகணபதி கூத்தாண்டவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ மாரியம்மன் . முருகன், ஆகிய நவகிரக சுவாமிகள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 யாக பூஜையில் இருந்து தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்று மகா கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம்  செய்தனர்.

இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தீபாராதனை ஆயிரக்கணக்கானோருக்கு காலை முதல் இரவு வரை மகா அன்னதானம் நடந்தது.

SCROLL FOR NEXT