சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட அனவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1431 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1387 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 917 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். தற்போது 8 ஆயிரத்து 98 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 635 ஆக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 1740 பேர் பலியாகி உள்ளனர்.