வாழப்பாடி,
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வாயிலாக, ஏப்ரல் மாதம் முழுவதும், நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற வாசகத்துடன், அரசு மருத்துவமனை வளாகத் தூய்மை, பள்ளிக் குழந்தைகளுக்கான தன் சுத்தம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப் படுகிறது.
இதையொட்டி வாழப்பாடி அரசு மருத்துவ மனை சார்பில், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, மாணவ-மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
சித்த மருத்துவர் செந்தில் குமார், செவிலியர் கண்காணிப்பாளர்கள் தேவதி, பத்மா, செவிலியர் சண்முகபிரியா ஆகியோர் தன்சுத்தம் மற்றும் ஊட்ட சத்து உட்கொள்வதின் முக்கி யத்துவம் குறித்து எடுத்துரைத் தனர். நிறைவாக ஆசிரியை கோகிலா நன்றி கூறினார்.