உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே கிரானைட் தொழிலதிபர் விபத்தில் பலி

சேலம் அருகே கிரானைட் தொழிலதிபர் விபத்தில் பலியானார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

காடையாம்பட்டி:

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நித்திரைவினை பகுதியை சேர்ந்தவர் சத்தியதாஸ். இவரது மகன்கள் பிரகாஷ் (வயது 36), பிரவின் (32) இவர்கள் கிரானைட் தொழில் செய்து வருகின்றனர்.

சம்பவத்தன்று பிரகாஷ், பிரவீன் மற்றும் குமரி மாவட்டம் நம்பாலி குளித்தலை பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் வினித் (26) ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்திலிருந்து ஆந்திரா மாநிலத்துக்கு கிரானைட் வியாபாரத்திற்கு காரில் சென்றனர். 

பின்னர் வேலையை முடித்துக் கொண்டு கன்னியாகுமரி திரும்பினர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த சமத்துவபுரம் அருகில் வரும்போது சாலையின் நடுவே தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மற்ற இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT