உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அரசு கண்ணாடி உடைப்பு-பயணி காயம்

சேலத்தில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 47).

இவர் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இவர் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து  அரசு பஸ்சில் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தார். சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு அருகே பஸ்  சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

இதில் ஜன்னலில் இருந்த கண்ணாடி உடைந்து அருகில் அமர்ந்திருந்த பயணி சின்னத்தம்பியின் கண்ணில் கண்ணாடி துண்டு சொருகியது.  வலியால் அலறி துடித்த அவரை  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சின்னதம்பி, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சின்னதம்பி, கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசி தாக்கியவர்களை  தேடி வருகிறார்கள்.