உள்ளூர் செய்திகள்

கேரள டிரைவரை தாக்கி சரக்கு வேன் கடத்தல் 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

பெங்களூரில் இருந்து சென்ற கேரள டிரைவரை தாக்கி சரக்கு வேன் கடத்தல் 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு தேடி வருகிறார்கள்.

சேலம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பொத்தம்படம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (வயது 27). டிரைவரான இவர் சரக்கு வாகனமான பிக்கப் வேனில் மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு பெங்களூர் சென்றார். 

அங்கு லோடு இறக்கி விட்டு, நேற்று மதியம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.சேலம் சென்னை பைபாஸ் சாலையில் திருவகவுண்டனூர் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இனோவா காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சமீர் ஓட்டி வந்த வாகனத்தை வழிமறித்து கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.

கரூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தவுடன் கடத்தல் கும்பல் சமீரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், 2 செல்போன்கள்,பறித்துக் கொண்டு சமீரை கீழே தள்ளிவிட்டு பிக்கப் வேனுடன்தப்பிச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சமீர் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT