பூ வியாபாரி கருத்தராஜ். 
உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே ரெயில் முன் பாய்ந்து பூ வியாபாரி தற்கொலை

ஓமலூர் அருகே ரெயில் முன் பாய்ந்து பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சக்கரை செட்டியப்பட்டி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கருத்தராஜ் (வயது 40). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (37). இவர்களுக்கு விஜி(17) என்ற மகனும், நந்தினி(14) என்ற மகளும் உள்ளனர். 

கருத்தராஜும் கிருஷ்ணவேணியும் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி பிரிவு பகுதியில்  பூ வியாபாரம் மற்றும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் கருத்தராஜ் இன்று அதிகாலை தனது சொந்த ஊரான கோபிநாதபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு சென்னையில் இருந்து சேலம் செல்லும் பிரதான ரெயில்வே பாதையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT