உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

சேலத்தில் கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்:

சேலம் சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது46).  இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து கருப்பூர் கிராமம் மேட்டுப்பதி காட்டு வளவில் இருக்கும் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டார்.  நிலத்தின் அருகிலுள்ள நபர்களுக்கும் சண்முகத்துக் கும் வழித்தடம் பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

சண்முகம் கரும்பு அறுவடை செய்ய செய்யக்கூடாது என்று சிலர் தகராறு  செய்து வந்தனர். இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20ம்தேதி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சண்முகம் விவசாய நிலத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கரும்பு தோட்டத்துக்கு  தீ வைத்து விட்டனர். 

இதுகுறித்து சண்முகம் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT