சந்தைப்பேட்டை பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து குறித்து விளக்கமளிக்கும் தீயணைப்பு துறையினர். 
உள்ளூர் செய்திகள்

காடையாம்பட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழா

காடையாம்பட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழா நடந்தது.

மாலை மலர்

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது. 

தீ விபத்தில்லாத சமுதாயமாக மேற்கொள்ள காடையாம்பட்டியில் அரசு அலுவலங்களான வட்டார கல்வி அலுவலகம், மின்துறை அலுவலக பணியாளர்களுக்கு தீ பாதுகாப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரமும் அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை கோல்டன் ரேஸ் மெட்ரிக்குலேசன்  பள்ளி முதல்வர் முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தீ பாதுகாப்பு போலி ஒத்திகை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரமும், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தீ பாதுகாப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டது. 

இதற்கான ஏற்பாட்டை நிலைய அலுவலர் ராஜசேகரன் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் செய்தனர்.