சேலம்:
சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்தவர் விஜய் என்ற கண்ணாடி விஜய் (வயது 39), பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது வரை ரவுடி பட்டியலில் உள்ளார்.
இந்த நிலையில் விஜய்க்கும், அவரது மனைவி ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த விஜய் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு கதறினர்.
தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த விஜய்க்கு ஒரு மகன் உள்ளார்.