சேலம்:
தமிழகத்தில் கடந்த (5-ந்தேதி) வியாழக்கிழமை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் நடைபெற்று வருகின்றன. நேற்று (9-ந்தேதி) திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைெபற்றது.
இன்று தேர்வு கிடையாது. நாளை (11-ந்தேதி) புதன்கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், இந்திய கலாச்சாரம், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோ- கெமஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 9 பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளன.
இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள் காலை 10 மணி அளவில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணி அளவில் தேர்வு நிறைவடையும்.