சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). இவர் நேற்று இரவு சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கந்தசாமி மீது மோதியது.
இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கந்தசாமியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.