உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

அன்னதானப்பட்டி:

சேலம்  சீலநாயக்கன்பட்டி ராமையன்காடு  பகுதியைச் சேர்ந்த  நல்லுசாமி  மகன் மாதேசன் (வயது 37). இவர்  பஸ் டிரைவராக வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு  மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்  கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால்  மாதேசன் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து கவலையில் இருந்து வந்த அவர் கடந்த 19-ந் தேதி பூச்சி மருந்தை  குடித்து விட்டு வீட்டில்   மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். 

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்   அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்  மாதேசன்  சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.