ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சட்டூர் மற்றும் தும்பிபாடி பகுதியை சேர்ந்தவர்கள் வருடா வருடம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு 8ம் வருடமாக 200க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரை கிளம்பி சென்றனர்.
வழக்கமாக தைப்பூசத் திருநாள் அன்று பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தற்போது பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர்.
வரும் 26-ம் தேதி பழனியில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். சுமார் 5 நாள் பயணமாக செல்லும் பக்தர்கள் ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்படுகின்றன.