சேலம்:
சேலம் அய்யன் திருமாளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி சுசீலா (வயது 24).
இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 2ந் தேதி கணவன்மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த சுசிலா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுசிலா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.