சேலம்:
சேலம் கோரிமேடு பகுதியில் ஒரு ஓட்டலில் சின்னபுதூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த ஓட்டலுக்கு நேற்று மதியம் அந்த பகுதியைச் சேர்ந்த சிவாஜி என்பவர் சாப்பாடு பார்சல் கட்டி தரச்சொல்லி கேட்டுள்ளார். அதற்கு உரிய பணத்தை விஜயகுமார் கேட்டுள்ளார். சிவாஜி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தகராறு ஏற்படவே சிவாஜி தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து இவரது மனைவி மற்றும் மகன் பிரசாத், ஆத்துக்காடு விஜயன் மற்றும் ராமு ஆகியோர் ஓட்ட்டலுக்கு வந்து விஜயகுமாரை அங்கிருந்த இரும்பு தோசை கரண்டியால் தலையில் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி, அவரது மனைவி உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.