விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில், கட்டைக்கால் ஏணியில் நடனமாடிய கலைஞர். 
உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

மாலை மலர்

வாழப்பாடி :

போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச் சாராயத்தால் மக்கள் பாதிப்புக் குள்ளாவதை தடுக்கும் நோக்கில், தமிழக அரசு சார்பில், பொதுமக்களுக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, வாழப்பாடி வட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார கிராமிய கலைநிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.

கட்டைக்கால் ஏணியில் நடனமாடிய கிராமியக் கலைஞர்கள், நையாண்டி மேளக் கச்சேரியுடன், போதைப்பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் பாதிப்புகள், உயிரிழப்புகள், சமூக மதிப்பின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர். 

திரளான பொதுமக்களும் பயணிகளும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்து விழிப்புணர்வு பெற்றனர்.