வாழப்பாடி:
வாழப்பாடி பகுதியில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் இறுதிகட்ட அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். வாழப்பாடியில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, பல்வேறு பகுதியை சேர்ந்த 359 விவசாயிகள், 1400 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி, ரூ.8,499முதல் ரூ.10,999 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.8,999 முதல் ரூ.12,999 வரையும் விலை போனது. மொத்தத்தில் வாழப்பாடி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த நூற்பாலை உரிமையாளர்கள், முகவர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி கொள்முதல் செய்தனர்.