உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் ரூ.4.18 கோடிக்கு பருத்தி ஏலம்

வாழப்பாடியில் ரூ.4.18 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

மாலை மலர்

வாழப்பாடி:

சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் வாழப்பாடி கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

பருத்தி தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.10 ஆயிரத்து 899 முதல் ரூ.8 ஆயிரத்து 889 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.14 ஆயிரத்து 999 முதல் ரூ.12 ஆயிரத்து 21 வரையிலும் விற்பனையானது. 

மொத்தம் 9 ஆயிரத்து 500 மூட்டை பருத்தி ரூ.4.18 கோடிக்கு விற்பனை ஆனது.