சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டனர்.
நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 23 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 126 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.