உள்ளூர் செய்திகள்

சேலம் முள்ளுவாடி கேட் பாலப்பணியில் தொடரும் மந்தம்

சேலம் முள்ளுவாடி கேட் பாலப்பணியில் தொடரும் மந்தம் ஏற்பட்டதால் 5 ஆண்டுகளாக தவிக்கும் பொது மக்கள்.

மாலை மலர்

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து  அஸ்தம்பட்டி, ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர் செல்லும் வாகனங்களுக்கு முக்கிய வழித்தடமாக  முள்ளுவாடி ரெயில்வே கேட் உள்ளது.

இதேபோல அஸ்தம்பட்டி. ஏற்காடு, கன்னங்குறிச்சி, ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அந்த வழியாக கலெக்டர் அலுவலகம், பழை பஸ் நிலையம், செவ்வாய்ப் பேட்டை, கடை வீதிகளுக்கும் சென்று வருகின்றன.

ரெயில்வே மேம்பாலம் முன்ளுவாடி கேட் வழியாக செல்லும் வாகனங்கள் தினமும்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செரி ரோட்டில்   ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியது. 

இந்த பணிகள் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் 50 சதவீத பணிகள் கூட இன்னும்  நிறைவு பெறவில்லை. இதனால் முள்ளுவாடி கேட்டில் 2 பாதைகளிலும் சென்று வந்த வாகனங்கள் ஒரே பாதையில் செல்கின்றன.

வாகன ஓட்டிகள் தவிப்பு இதனால் தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக அந்த வழியாக ரெயில்கள் செல்லும் போது இரு புறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நிற்கின்றன. 

பின்னர் போக்குவரத்து சீராக அரை மணி நேரததிற்கும் மேலாகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பல  மணி  நேரம் முள்ளுவாடி கேட்டில்  வாகன ஓட்டிகள்  சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. 

எதிர்பார்ப்பு  இதனால் எப்போது இந்த பால   வேலை முடியும், பயணிகள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்பது  அனைவரின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே முள்ளுவாடி ரெயில்வே கேட் பாலப்பணிகளை விரைந்து முடித்து அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்று அதிகாரி கள் இணைந்து  தீர்வு காண வேண்டும் என்று  வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.