உள்ளூர் செய்திகள்

16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது-பெற்றோர் உள்பட 3 பேர் மீது வழக்கு

16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சங்ககிரி:

எடப்பாடி தாலுகா ஆவணி பேரூர் கீழ்முகம் கிராமம் குப்பதாசன்வளவை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை, அவளின் பெற்றோர் சம்மதத்துடன் குழந்தை திருமணம் செய்தார். 

இந்தநிலையில் சமீபத்தில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சுகந்தி விசாரணை நடத்தினார். பின்னர் அவர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா சிறுமியின் தாய், தந்தை மற்றும் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.