உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் எம்.டி.எஸ்.தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு சேலத்தில் தேர்வு மையம் அமைப்பு

மத்திய அரசின் எம்.டி.எஸ்.தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு சேலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.

சேலம்:

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்ச-கத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.) காலியாக உள்ள 1948 எம்.டி.எஸ். பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. 

சேலம், நாமக்கல் இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10, 12 -ம் வகுப்பு, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். 

இதையடுத்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு   எழுத்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  

மத்திய அரசின் இ.எஸ்.இ. இணையதளத்தில் பதிவு எண், பாஸ்வேர்டு கொடுத்து ஹால்டிக்கெட்டை பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கும் செய்ய  கால அவகாசம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை வழங்கப்பட்-டுள்ளது. அதற்குள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

பேஸ்-1 தேர்வு எம்.டி.எஸ். (மல்டி டாஸ்கிங் அலுவலர்) பணிக்-கான எழுத்துத் தேர்வு பேஸ்-1, பேஸ்- 2 என 2 கட்டங்களாக நடைபெறும்.  பேஸ்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தான் பேஸ்-2 தேர்வு எழுத முடியும்.   பேஸ்-1 தேர்வு முடிவு வெளியான பிறகே  பேஸ்-2 எழுத்துத் தேர்வுக்-கான தேதி அறிவிக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் சேலம் சிவதாபுரம் எம்.ஜி.ஆர்.நகரில்  இயங்கி வரும் ஒரு தனியார் தொழிற்நுட்ப சர்வீஸ் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.