உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வீட்டு அறிவியல் பாட தேர்வு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வீட்டு அறிவியல் பாட தேர்வு நடைபெறுகிறது.

சேலம்:

இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது  10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி வருகிற திங்கட்கிழமை, அதாவது அடுத்த மாதம் 2-ந்தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வீட்டு அறிவியல் பாடம் தேர்வு நடைபெறுகிறது.