உள்ளூர் செய்திகள்

ஏத்தாப்பூரில் ராட்டின உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு

ஏத்தாப்பூரில் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டு இருந்ததால் ராட்டின உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாலை மலர்

ஆத்தூர்:

புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரமுள்ள உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு பல்வேறு கடைகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள், மிகப்பெரிய ராட்டினம் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த செம்மலை (வயது 39), தேவியாக்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (47), பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (30) ஆகியோர் அமைத்திருந்த ராட்டினம், ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், மோட்டார் பொருத்திய ராட்டினம் இயற்றியதாகவும் ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன் பேரில் 3 பேர் மீதும் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.