உள்ளூர் செய்திகள்

மேட்டூர் நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்ய அழைப்பு

மேட்டூர் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்யலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

சேலம்:

மேட்டூர் ஸ்கொயர் மார்க்கெட்டில் இயங்கி வந்த மேட்டூர் காவேரி பைனான்ஸ், அன்னை காவேரி பைனான்ஸ், ஸ்ரீ காவேரி பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு காலம் வந்தவுடன் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவின் பேரில் முதலீட்டாளர்களுக்கு மேட்டூர் ஆர்.டி.ஓ. மூலம் அவர்களது முதலீட்டு பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. 

எனவே, இந்த நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பொருளாதார குற்றப்பிரிவில் போலீஸ் நிலையத்தை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.