உள்ளூர் செய்திகள்

சேலம் இரும்பாலை வளாகத்தில் கேபிள் திருடியவர் கைது

சேலத்தில் செயல்பட்டு வரும் இரும்பாலை வளாகத்தில் கேபிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் கே.ஆர்.தோப்பூர், கோனகாபாடி, முதலியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). 

இவர் சேலம் இரும்பாலையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் மதியம் சேலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து  எச்.டி. கேபிளை  திருடிக் கொண்டு இருந்தார். 

இதைக்கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், கண்ணனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.