மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள மடத்தூர், சதுரபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை முடிந்த பின்னர் கோயில் பூசாரி ராஜா (வயது52). என்பவர் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் இன்று கோவில் பூசாரி ராஜா கோவிலின் கதவை திறந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கோவிலின் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி மற்றும் உண்டியலில் உள்ள ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை மர்ம நபர்கள் திருடினர்.
பின்னர் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு கருவியை அகற்றி கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கிணற்றில் வீசிய சி.சி.டி.வி பதிவு காட்சி கருவியை போலீசார் பறிமுதல் செய்து சோத னையிட்டு வருகின்றனர்.