சேலம்:
சேலம் அருகே உள்ள வெள்ளக்கல் பட்டி உடைந்த பாலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்,இவரது மகன் தினேஷ் குமார் (வயது 17). பிளஸ்-1 மாணவரான இவர் தனது நண்பனின் இல்ல திருமண விழாவுக்கு செல்லவேண்டும் என்று தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு பெற்றோர் மறுக்கவே சோர்வுடன் காணப்பட்ட தினேஷ்குமார் நேற்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால் பதற்றமடைந்த பெற்றோர் தினேஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
எங்கும் கிடைக்காததால் கருப்பூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.