உள்ளூர் செய்திகள்

மது குடிக்க அனுமதி-பெட்டி கடைக்காரர்கள் 6 பேர் மீது வழக்கு

மது குடிக்க அனுமதி பெட்டி கடைக்காரர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள நத்தியாம்பட்டி பகுதியில் பெட்டிக்கடைகளில் சிலர் மது குடிக்க அனுமதிப்பதாக தாரமங்கலம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை செய்தனர். 

அப்போது மது குடிக்க அனுமதித்ததாக பெட்டிக்கடைக்காரர்கள் ரஞ்சித் (வயது45), பாப்பம்பாடி பகுதியை சேர்ந்த சுமதி (39), செல்லம்மாள் (60), கிருஷ்ணராஜ் (58), தமிழரசன் (28) மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த ஜனார்த்தனன் (34) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.