உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்


தமிழக பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் தாலிக்கு தங்கம் மற்றும் மடிக்கணினி திட்டம், மகளிருக்கான இருசக்கர வாகனத்திற்கு மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்காதது,

சிலிண்டர்களுக்கு மாதம் 100 ரூபாய் குறைக்காததையும், பெட்ரோல் டீசல் விலை குறைக்காததையும் கண்டித்தும் பா.ஜனதா கட்சி சார்பாக ஆத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வக்கீல் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆத்தூர் நகர பொதுச்செயலாளர் ராஜா நன்றி கூறினார்.