ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தென்னம் பிள்ளையூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கொடிக்கம்பத்தில் 3 போல்ட் நட்டுகள் கழட்டப்பட்டு ஒரு போல்ட் நெட்டை கழட்ட முடியாமல் போனதால் கம்பத்தை அப்படியே தள்ளி சாய்த்து சேதப்படுத்தி அருகிலுள்ள வயலில் போட்டு சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் மணிகண்டன் அறிவுறுத்தலின் பெயரில் ஒன்றிய தலைவர் ரவி என்கிற ராஜேந்திரன் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.