உள்ளூர் செய்திகள்

குடும்பத்தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேலம் கிச்சிபாளையம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் கரின் காம்பு பகுதியை சேர்ந்தவர் யாரப். இவரது மனைவி அம்மு (வயது 25) கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட் டது.  இதன்காரணமாக நேற்று இரவு அம்மு விஷத்தை மண் எண்ணையில் கலந்து குடித்து விட்டார்.

இதை அறிந்த குடும்பத் தினர் அம்முவை சேலம் அரசு  மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சேலம் அம்மாபேட்டை  அழகப்பன் தெருவை சேர்ந்த வைரவேல் மகன் ஜெகநாதன் (வயது 27). இவர் படித்துவிட்டு படிப்புக் கேற்ற வேலை தேடி வந்தார்.

சரியான வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த ஜெகநாதன் நேற்றிரவு கொசுவை விரட்ட பயன்படுத்தும் ஆல்அவுட் மருந்தை குடித்துவிட்டார்.

இதை அறிந்த பெற்றோர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் அம்மா பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.