கருப்பூர்:
சேலம் கருப்பூர் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம், ஓமலூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் தரிசு நிலம் மைன்ஸ் என்ற இடத்தில் அளவீடு செய்து ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த இடத்தில் உள்ள வெள்ளைக் கல் மற்றும் கனிம மண் வெட்டி மர்ம நபர்கள் கடத்தப்படுவதாக ஓமலூர் தாசில்தார் வள்ள முனியப்பனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வருவாய் துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி இன்றி 2 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மேகன சைட் மண் சமன் படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தாசில்தார் வள்ள முனியப்பன், கூறுகையில், அனுமதியின்றி வெள்ளை கற்கள் கடத்துவதாக தகவல் வந்தது. அதன்பேரில் நேரில் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் ஓடி விட்டனர்.
மேலும் அரசுக்கு சொந்தமான வெள்ளக்கல் கனிமங்கள் வெட்டி கடத்தலில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.