உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

சேலம் அன்னதானப்பட்டியில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

அன்னதானப்பட்டி:

சேலம்  நிலவாரப்பட்டி  ராஜவீதி பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 45).  இவர் அன்னதானப்பட்டி அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்-கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.  இந்த நிலையில் பச்சமுத்து கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி   வேலை முடிந்து  நள்ளிரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.  

அப்போது அன்ன-தானப்பட்டி மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் வளைவு அருகே அவர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளை  3- க்கும் மேற்பட்ட வாலிபர்கள்  திடீரென வழிமறித்து அவரை  சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த  தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைந்த அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.     

இந்த வழக்கில் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனி பகுதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி வெங்கடேஷ் ( வயது 32), டிரைவர் மூர்த்தி (26), டிரைவர் வினோத் (24) ஆகிய 3 பேரை  அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, எஸ்ஐ பாரதிராஜா  கைது செய்தனர். 

போலீஸ் விசாரணையில்  இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த  காரணத்தால் அவர்கள் பச்சமுத்துவை  தாக்கியதாக தெரிவித்தனர்.  இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சுரேஷ் பாபு ( வயது 39) என்பவரை நேற்று  போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.