உள்ளூர் செய்திகள்

சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தல்

சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தலில் சி.சி.டி.வி. காமிரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  மூலாராம் .இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21). இவர் நேற்று கடையில் இருந்தபோது 6 பேர் கும்பல் இவரை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது.

இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார், ஜயராமை கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருட்கள் கடத்தல் பிரச்சனையில் ஜெயராம் கடத்தப்பட்டதும்,  அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக  மர்ம கும்பல் ஜெயராமை கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதற்கிடையே ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல் உருவம் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை  வைத்து தனிப்படை  போலீசார் தீவிரமாக அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் தர்மபுரி, ஓசூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.