சேலம்:
சேலம் அழகாபுரம் வெள்ளிசந்தை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவருக்கும் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆனது.
இவர்களுக்கு சந்தோஷ்குமார்(20) என்ற மகன் உள்ளான். கிருஷ்ணன் நிர்மலா (40) என்பவரை 2-வதாக திருமணம் செய்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சந்தோஷ்குமார் அழகாபுரம் பெரியபுத்தூரில் உள்ள தனது பாட்டியை பார்க்க வந்தார் பின்னர் தனது தந்தையின் வீட்டுக்குச் சென்ற சந்தோஷ்குமார் அங்கிருந்த நிர்மலாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தில் குத்தினார்.இதில் படுகாயம் அடைந்த நிர்மலா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை தேடி வருகிறார்கள்.