உள்ளூர் செய்திகள்

பாலில் டீ தூளுக்கு பதிலாக விஷத்தை கலந்து குடித்த இளம்பெண்

பாலில் டீ தூளுக்கு பதிலாக விஷத்தை கலந்து குடித்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில்  அருகே உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மொய்தீன். இவரது மகள் சபீனா (வயது 18). இவர் நேற்று இரவு டீ போடும்போது கவனக் குறைவாக  டீ தூளுக்கு பதிலாக அருகில் இருந்த எலியை கொல்ல பயன்படுத்தும் விஷ மருந்தை எடுத்து அதில் போட்டு விட்டார்.

பின்னர் அதனை குடித்த சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கவே, சந்தேகமடைந்த பெற்றோர் சமையல் அறையில் சென்று பார்த்தபோது அங்கு டீத்தூள் டப்பாவிற்கு அருகில் இருந்த எலி மருந்து டப்பா திறந்து இருந்தது தெரியவந்தது.

சுதாரித்து  கொண்ட பெற்றோர், சபீனாவை உடனடியாக  சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சபீனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT