தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 1601 ரேசன் கடைகள் மூலம் கடந்த 4-ந் தேதி முதல் இந்த பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் 21 ஆயிரத்து 199 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.