உள்ளூர் செய்திகள்

எடப்பாடி நகராட்சியில் 30 வார்டுகளில் 95 வேட்பாளர்கள் போட்டி

எடப்பாடி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாலை மலர்

எடப்பாடி:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், எடப்பாடி நகராட்சிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் 30, தி.மு.க.-29, பா.ம.க-9, பா.ஜ.க.-10, அ.ம.மு.க.-2, தே.மு.தி.க.-2, மக்கள் நீதி மையம்-1, ஆம்ஆத்மி - 4, காங்கிரஸ்-1 மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 7 என மொத்தம் 95 வேட்பாளர்கள் எடப்பாடி நகராட்சியில் நகர மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் களம் காண்கின்றனர்.