உள்ளூர் செய்திகள்

84 ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடமாற்றம்

சேலம் மாவட்டத்தில் 84 ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடமாற்றம்

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இங்கு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர் நிலையிலான அலுவலர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

அதன் தொடர்ச்சியாக தற்போது, மேலும்84 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இளநிலை உதவியாளர், ஊர்நலநிலை அலுவலர் நிலை-2 மற்றும் காசாளர் நிலையில் பணிபுரிந்து வரும் 62 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல், தட்டச்சராக பணிபுரிந்த 22 பேரும், வெவ்வேறு ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.