சேலம்:
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் உள்ள 699 இடங்களுக்கு 1,519 ஓட்டுச்சாவடிகளில் வருகிற 19- ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் 38 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் 87 பேர், நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் புகார் விபரம் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும்படி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநகராட்சிக்கு 18004256077, கலெக்டர் அலுவலகம் 0427-2414200 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றுவதை கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட குழுக்களும், 63 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.