சேலம்:
ஓமலூர்-மேட்டூர் டேம் இடையே ரெயில் பாதையில் இருவழி பாதைக்கான பொறியியல் பணி நடை பெறுகிறது.
இதையொட்டி சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்கள் நாளை மறுதினம் (8-ந்தேதி) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
அதன்படி பெங்களூர் எர்ணாகுளம் விரைவு ரயில் (வண்டி எண்12677) பெங்களூரிலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் கண்டோன் மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட் , குப்பம், மேக்னசைட் வழியாக சேலம் வந்தடையும், தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்பட மாட்டாது,
இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு விரைவு ரெயில் (12678) எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சேலம், மேக்னசைட், குப்பம் பங்காரு பேட் கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூர் சென்றடையும், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாது,
கோவை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் (11014) கோவையிலிருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு சேலம், மேக்னசைட் ,குப்பம், பங்காருபேட், கிருஷ்ணராஜ புரம் வழியாக செல்லும், தர்மபுரி ஓசூர் வழியாக இயக்கப்பட மாட்டாது.
இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.