உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஒரு நம்பர் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி கருக்கல்வாடி பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 39), மாதையன் (56), அழகுசமுத்திரம் வெங்கடாசலம் (37) ஆகியோரை வெள்ளைத்தாளில் அச்சிட்ட லாட்டரி விற்பனை செய்ததாக தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT