தீ வைக்கப்பட்ட சோளத்தட்டையை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

வீராணம் அருகே சோளத்தட்டைக்கு தீ வைத்த 2 பேர் கைது

வீராணம் அருகே சோளத்தட்டைக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சேலம்: 

சேலம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி தேவி (வயது 42) இவர்களுக்கு தமிழ்செல்வன், பாலாஜி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமிதேவியின் மாமியார் அதே பகுதியை சரளா என்பவருக்கு சொந்தமான 1ஏக்கர் 50 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இதையடுத்து சரளா நிலத்தை பரசுராமன் என்பவருக்கு விற்றுவிட்டார். இதனால் குத்தகை முடிவதற்குள் நிலம் விற்கப்பட்டதால் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. லட்சுமி தேவி சொந்தமான 30 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். 

இந்த நிலையில் நிலத்தை வாங்கிய பரசுராமனுக்கும், லட்சுமிதேவியின் நிலம் அருகருகே இருப்பதால் இது தொடர்பான தகராறு இருந்து வருகிறது.

இதனால் அடிக்கடி தகராறு இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி தேவி பயிரிடப்பட்ட சோளத்தட்டை தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் லட்சுமிதேவிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசில் லட்சுமி தேவி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணைக்கு பிறகு பரசுராமன் அவரது மாமியார் தனம் ஆகிய  2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.