சேலம்:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு வண்டியில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் ராமன், கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு ஆகியோர் இன்று காலை 5.30 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் சோதனை செய்தனர்.
அப்போது வண்டியின் எஸ். 4 கோச்சில் பயணம் ஒருவரின் பேக்கை சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களது போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் பகன் (வயது 40) என்பது தெரியவந்தது.
அவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு என்ற ஊரில் கிருஷ்ணா குட்டி என்பவருக்கு சொந்தமானகோழிப் பண்ணையில் வேலை செய்து வருகிறார். அவரை கைது செய்து தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.