ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள். 
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தங்குதடையின்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பாக இன்று காலை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கோவை மண்டல செயலாளர் சிவக்குமார், சேலம் மாவட்ட பொருளாளர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கோவை மண்டல பொருளாளர் குமரேசன், மண்டல் குழு உறுப்பினர் ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.