விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட தீபக். 
உள்ளூர் செய்திகள்

ஏற்காடு மலை பாதையில் வாகனத்தில் மோதிய வாலிபரின் கால் முறிந்தது

ஏற்காடு மலை பாதையில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் வாகனத்தில் மோதி காயம் அடைந்தார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கல்யாண்குமார் மகன் தீபக் (வயது 22). இவர் மற்றும் ஜெயப்பிரகாஷ் மகன் தாஸ் (24) ஆகியோர் ஏற்காட்டை சுற்றிப் பார்ப்பதற்காக  மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

 பின்னர் மாலையில் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினர். அப்போது ஏற்காடு மலை பாதை 17-வது கொண்டை ஊசி வளைவில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT