சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினம் மரக்கன்றுகள் நடும் விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

வாழப்பாடி:

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT