உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக வங்கி குழுவினர் ஆய்வு

உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.

அவர்கள் அரசு ஆஸ்பத்தியில் செயல்படுத்தப்படும் எமர்ெஜன்சி திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டஙகள் குறித்தும், அந்த திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது, அதற்காக பெறப்பட்டுள்ள நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர்.

அப்போது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்யமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.